ஆயுத பூஜையை (Ayudha Poojai) முன்னிட்டு வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பூஜையின்போது சாத்துக்குடி, திராட்சை, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்ச், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை (Fruits) வைத்தும், தேங்காய், வெற்றிலை பாக்கு, பொரி, கடலை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை படையலிட்டு வழிபடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா (Corona) தொற்று அதிகளவு பரவிய நிலையில், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் எளிய முறையில் ஆயுதபூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இதனால், வழக்கத்தை விட இந்தாண்டு சேலம் மாவட்டத்தில் பொரி மற்றும் பழங்கள் விற்பனை சரிந்தது.
50% விற்பனை குறைவு:
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொள்முதல் (Purchase) செய்தோம். ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.80, ஆரஞ்ச் ரூ.100, வாழைப்பழம் சீப்பு ரூ.50, சீத்தாப்பழம் ரூ.40, எலுமிச்சை பழம் ஒன்று ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு பழங்கள் விலை குறைந்திருந்தாலும், வாங்குவோரின் எண்ணிக்கையும், வாங்கும் பொருட்களின் அளவும் குறைந்தது. இதனால், அதிகளவு இருப்பு வைத்து பழங்களை விற்பனை செய்ய காத்திருந்த வியாபாரிகள்(Merchants) ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு பழங்கள் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது என்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
Share your comments