ஊட்டியில் கேரட் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிபிளவர், முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி (Cultivation) செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஊட்டியில் விளையும் கேரட்டுக்கு தனி மவுசு உள்ளது.
விலை வீழ்ச்சி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. தற்போது கேரட் (Carrot) விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். ஒரு கிலோ கேரட் ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கேரட் விலை ரூ.100-ஐ தாண்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இதை போல் ஊட்டியில் பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற காய்கறி விலையும் வெகுவாக குறைந்து உள்ளது. ஒரு கிலோ பூண்டு (Garlic) ரூ.60 முதல் ரூ.100 வரை, உருளைக்கிழங்கு ரூ.50, சின்ன வெங்காயம் ரூ50, பெரிய வெங்காயம் ரூ.24, தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.32, வெண்டைக்காய் ரூ.32, பீன்ஸ் ரூ.60 என விற்பனை ஆகிறது.
விவசாயிகள் கவலை
கர்நாடகா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட், பூண்டு நீலகிரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் ஊட்டி கேரட்டுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளியிடங்களில் இருந்து வரும் கேரட் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஊட்டி கேரட்டுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விலை வீழ்ச்சி காரணமாக சில விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை (Harvest) செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். சிலர் விலை இல்லாவிட்டாலும் அறுவடை செய்து வேறு காய்கறி பயிரிட நிலத்தை தயார் செய்து வருகின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
மகசூலை அதிகரிக்க பயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி!
Share your comments