1. செய்திகள்

CBSE: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது, 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது! அதிரடி உத்தரவு வெளியீடு!

Sarita Shekar
Sarita Shekar
stay home stay safe

கொரோனா தொற்று நோய்க் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது மேலும் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும். இதையடுத்து, மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆன்லைன் வகுப்புகள்

 ஊரடங்கு உத்தரவு காரணமாக மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியிலான வகுப்புகளை மத்திய அரசு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடைபெற்றன.

தேர்வின்றி தேர்ச்சியான மாணவர்கள்

கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம்   கடுமையாக இருந்ததினால்  தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 , 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கான அரியர்  தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள்

இதற்கிடையில், கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து , தொழிற்சாலை,கல்வி நிறுவனங்கள், பொழதுபோக்கு சார்ந்தவை என அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டன.

மீண்டும் அதிகரித்த கொரோனா

இந்த சூழ்நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நோய்த் தொற்று குறித்த அச்சம் நிலவி வருகிறது.

இரவு நேர ஊரடங்கு

இதற்கிடையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் சமீபத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அதன்படி, அம்மாநிலத்தில் இரவு 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இரவு ஊரடங்கு உத்தரவின் போது கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்கள்  மூடப்பட்டுள்ளன. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிடப்பட்டுள்ளார் இந்தியாவில் 2-வது அலை கொரோனா பரவி வரும் நிலையில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்

3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு!

English Summary: CBSE: CBSE Class 10 exam canceled, Class 12 exam postponed! Order Release! Published on: 16 April 2021, 12:10 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.