தமிழக ரேஷன் கடைகளில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவினருக்கு, அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை, மத்திய உணவு துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்ய உள்ளது.
இது குறித்து, தமிழக உணவு வழங்கல் துறை ஆணையர் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
அரசு முயற்சி (Government effort)
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள அரசு முயற்சி மேற்கொள்கிறது.
விரைவில் ஆய்வு (Review soon)
மேலும், பயனாளிகளின் திருப்தி விபரத்தை அறிந்திடவும், குறைகளை சரி செய்திடவும், அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வு பணி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.
எடை உறுதி(Make sure the weight)
எனவே, கார்டுதாரர்களுக்கு முழு அளவு பொருட்களை, எளிதாகவும், சரியான எடையிலும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அட்டைகள் ஆய்வு (Inspect the cards)
மூன்று மாதங்களுக்கு மேல், பொருட்கள் பெறாத அட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
நாட்டில், எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கான இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!
ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!
Share your comments