விவசாயிகள் தங்கள் பேராட்டத்தைக் கைவிட்டால், பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொடரும் போராட்டம் (The struggle to continue)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மேற்கொண்டு வரும் இந்தப் போராட்டம் சுமார் 5 மாதங்களை எட்டியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி (Negotiation failed)
அதேவேளையில், விவசாயச் சங்கங்களுடன், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற பலகட்டப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்கிறது.
மிரட்டும் கொரோனா (Intimidating corona)
இதுஒருபுறம் இருக்க, தற்போது, நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் லட்சக்கணக்கானோர், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியஅரசு அழைப்பு (Union Government Call)
பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு விவசாயிகளுக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
அல்லது போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். இதற்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டால், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் எனவும் தோமர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!
உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!
உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!
Share your comments