மது அருந்தாமல் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோயை நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மது அருந்தாமல் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோயை NAFLD (Non-Alcoholic Fatty Liver Disease), புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் NPCDCS (National Programme for Prevention & Control of Cancer, Diabetes, Cardiovascular Diseases and Stroke) இணைப்பதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்துள்ளார்.
ஈரல் கொழுப்பு நோய் தாக்கம் அதிகரிப்பு
மது அருந்தாமல், வைரஸ் பாதிப்பு இல்லாமல் அல்லது மருந்துகள் காரணங்களை தவிர்த்தும், இயல்புக்கு மாறாக ஈரலில் கொழுப்பு சேர்வது, ஈரல் புற்றுநோய் போன்ற தீவிரமான உடல்நிலை பாதிப்பு என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக, ஈரல் கொழுப்பு நோய் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 1990ம் ஆண்டுகளில் 40 லட்சம் பேருக்கு ஈரல் கொழுப்பு நோய் இருந்தது. 2017ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 94 லட்சமாக அதிகரித்தது.
நோயை தடுக்க நடவடிக்கை தேவை
இந்தியாவில் உடல் பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகளில் 9 சதவீதம் முதல் 32 சதவீதம் பேருக்கு, ஈரல் கொழுப்பு நோய் இருப்பதாக தொற்று நோயியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். இந்த ஈரல் கொழுப்பு நோய்க்கு தடுப்பு நடவடிக்கை தேவை என்பதை அடையாளம் கண்ட முதல் நாடாக இந்தியா மாறிவருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
அதனால் தற்போதுள்ள தேசிய தொற்று நோய் திட்டத்தின் உத்திகளை, ஈரல் கொழுப்பு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கும் பின்பற்ற வேண்டும் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இதுவரை 838.39 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்துக்காகவும், 683.34 லட்சம் பேர் நிரிழிவு நோய்க்காவும், 806.4 லட்சம் பேர் 3 விதமான புற்றுநோய்களுக்காகவும், சுகாதார நல மையங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்’’ என டாக்டர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க...
நாடு முழுவதும் உள்ள இயலாத மக்களுக்கு இலவச இ-ரிக்ஷா! - பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவிப்பு!
உணவுப் பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க சீரிய நடவடிக்கை - மத்திய அரசு!!
திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!
Share your comments