நடப்பு பட்ஜெட் அறிவிப்பில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.எம் கிசான் திட்டத்தில் அதிக விவசாயிகளை இணைக்கும் நடவடிக்கையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விவசாயிகளின் கடன் தள்ளுபடிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கவுள்ளது. இதைதொடர்ந்து வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22-க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்தியா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை மீட்கும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித்தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை ரூ.10,000 என உயர்த்த முடிவு செய்துள்ளதாக வெளிவட்டார தகல்வகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதிக விவசாயிகளை மத்திய அரசின் பி.எம் கிசான் திட்டத்தில் இணைக்கும் நடவடிக்கையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொதுமுடக்கம், மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான கடன் தள்ளுபடிகள் குறித்த அறிவிப்புகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எம். கிசான் திட்டம் (PM Kisan Scheme)
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ 6,000 வீதம் 3 தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது.
முதல் தவணை டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கும், இரண்டாவது ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கும் இடையே அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இது வரை 7 தவணைகளில் சுமார் 11 கோடி விவசாயிகள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது வரை நீங்கள் பி.எம் கிசான் திட்டத்தில் இணையவில்லை என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பி.எம் கிசான் திட்டத்தில் இப்போதே இணைந்திடுங்கள்...!
ஆன்லைன் மூலம் பிஎம் கிசான் திட்டத்தில் இணைவது எப்படி?
-
முதலில் பி.எம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.
-
பின் Farmers corner பகுதியில் "New registration option" என்பதை கிளிக் செய்யுங்கள்
-
பின் அதில் உங்களின் AATHAAR எண்ணை பதிவிடுங்கள் பின் உங்களுக்கான புதிய விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும்.
-
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.
-
கடைசியாக submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
பின் நீங்கள் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்தர்கான பதிவு எண் reference number வழங்கப்படும்.
-
விண்ணப்ப படிவத்தை நேரடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் படிக்க...
புயல்களைத் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு! மீண்டும் மத்திய குழுவை அழைக்க பரிந்துரை!
வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான எதிர்ப்பார்ப்பு!
கரகாட்டம் ஆடிக்கொண்டே வயலில் நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியின் வித்தியாசமான முயற்சி!
Share your comments