1. செய்திகள்

சேலத்தில் நடைபெற்ற சிறுதானிய வகை கண்காட்சி! விவசாயிகள் பங்கேற்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit :Samayam

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சேலம் அடுத்த ஆத்தூர் வட்டாரத்தில் சிறு தானிய கண்காட்சி மற்றும் விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு பாரம்பரிய தானிய வகைகள் காட்சிப்படுத்தி விளக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறு தானிய கண்காட்சி மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிறுதானியங்கள் நன்மைகள் பற்றியும் ஊட்டச்சத்து மிக்க தானியங்களை பயன்படுத்துவதால் உடல் நலம் காக்கப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தானிய கண்காட்சி

இதைத் தொடர்ந்து அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற கண்காட்சியில், பாரம்பரிய நெல் ரகங்கள் நுண்ணூட்ட சத்துகள், உயிர் உரங்கள், விதைகள் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், பாராம்பரிய நெல் பயிர்கள், மூலிகை பயிர்கள் மற்றும் சொட்டு நீர் பாசனம் கருவி, மக்காச்சோள பயிர்கள் விதைப்பு கருவி, களை வெட்டும் கருவிகள் என விவசாயப் பொருட்களை அனைத்தும் இடம்பெற்றன. மேலும், விவசாயிகள் பயனடையும் வகையில் உழவர் ஆலுவலர் தொடர்பு திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

விழிப்புணர்வுப் பேரணி

அதன் பின்னர் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பயன்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதனை, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார், வேளாண்மைத்துறை அலுவலகத்தில் துவங்கப்பட்ட இந்த பேரணி ஆத்தூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

Read more

PM Kisan திட்டத்தின் 7-வது தவணைக்கு காத்திருப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்?

டிச.6யை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

English Summary: cereals exhibition held in Salem as a part of National Food Security Program farmers participate Published on: 10 December 2020, 03:58 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.