விவசாயிகள் தங்கள் வருவாய் மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கிக்கொள்ள சான்று அளிக்கப்பட்ட சணல் விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வேண்டுகோள விடுத்துள்ளார்.
விதைகள் விநியோகத் திட்டம் (Seed distribution scheme)
ஒடிசா மாநிலத்தின் பாரக்பூரில் உள்ள ஐசிஏஆர்-சிஆர்ஜேஏஎஃப் (ICARC-CRJAF) சார்பில் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக திட்டம் மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வுப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பேசினார்.
விதை உற்பத்தி அதிகரிப்பு (Increase in seed production)
அப்போது, வெறும் 60 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் மற்றும் 20,000 விவசாயிகளோடு 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐகேர் முன்னெடுப்பு, வெறும் ஒன்றரை வருடங்களில் வேகமாக முன்னேறி 2017ம் ஆண்டு 600 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளாக உயர்ந்தது.
2.6 லட்சம் விவசாயிகள் (2.6 lakh Farmers)
இந்தத் திட்டத்தின் கீழ் 2.60 லட்சம் விவசாயிகளுக்கு அரசு, இதுவரை ஆதரவு அளித்துள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சணல் ஐகேர் முன்னெடுப்பை சரியான முறையில் கொண்டுசென்றதுடன், நேர்மையான முயற்சிகளும், சிறப்பான ஒருங்கிணைப்பும் எதிர்பார்த்த பலன்களை அளித்திருக்கிறது.
5 லட்சம் விவசாயிகள் (5 lakh Farmers)
10,000 குவிண்டால் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோகிக்கப்படுவதன் மூலம், சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். சணல் புவி சார்ந்த ஜவுளி உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சணல் புவி சார்ந்த ஜவுளியை ஊக்குவிக்கும் வகையில், சணல் புவி சார்ந்த ஜவுளிக்கான தர நிலைகளுக்கு இந்திய தர நிலை அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இவ்வாறு ஸ்மிருதி இராணி கூறினார்.
மேலும் படிக்க...
வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!
உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க புதிய செயலி அறிமுகம்!
Share your comments