தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
5 நாட்களுக்கு மழை
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் வரும் ஆக., 8, 9, 10, 11 ஆகிய 5 நாட்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைக்குடா, தென் மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்இப்பகுதிகளில் மீனவர்கள் இன்றும், வரும் ஆக.,8,9 ஆகிய தேதிகளும் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments