காற்று வேகமாறுபாடு காரணமாக, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
காற்றின் வேகமாறுபாடு (Wind speed variation)
24.03.21
-
திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
25.03.21 முதல் 28.03.21 வரை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
எனினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வருவதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். மதிய வேளையில் வெளியில் செல்லாமல் இருந்தால், பல நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
PM Kisan நிதி அடுத்த வாரம் விடுவிப்பு? மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்தால் ரூ.4000 கிடைக்கும்!!
சரியும் முள்ளங்கி விலை: ஒரு கிலோ ரூ.1க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை!!
Share your comments