தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 2ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கிழக்கு திசைக் காற்று (East direction wind)
கிழக்கு திசைக் காற்றலை காரணமாக, இன்று முதல் வரும் 2ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
3.02.2021
-
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் இலேசான பனிமூட்டத்துடனும் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
பிப்ரவரி 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடதிசையில் இருந்து பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments