தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வறண்ட வாநிலை (Dry Weather)
அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
-
20-01-2021 மற்றும் 21.01.2021 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
-
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச மழைஅளவு (Maximum Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மைலாடி மற்றும் கொட்டாரத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
இன்று தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
விடைபெறும் வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை, தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!
Share your comments