தமிழகத்தின் இன்று 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் (Chennai Meterological Center) கூறியுள்ளது. ம.பி., முதல் வட தமிழகத்தின் கடலோர பகுதி வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இன்று(ஜூன் 6)
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 7 மற்றும் 8
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்
ஜூன் 9 ,10
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்
சென்னை நிலவரம்
சென்னையை (Chennai) பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை ஒட்டி
மழை அளவு
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 19 செ.மீ.,
- பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காட்டில் 9 செ.மீ.,
- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 8 செ.மீ.,
- கடலூர் மாவட்டம் தொழுதூர்,நெய்வேலி, தேனி மாவட்டம் சேத்துப்பாறை திருச்சி மாவட்டம் நாவலூர் கோட்டப்பட்டு தலா 7 செ.மீ.,
- தேனி மாவட்டம் பெரியாறு, வேலூர் மாவட்டம் காட்பாடி, கள்ளக்குறிச்சி மண்ணூர்ப்பேட்டில் தலா 6 செ.மீ.,
- பெரம்பலூர் மாவட்டம் ஏறையூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி,நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூன் 8
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்
ஜூன் 09 மற்றும் 10
மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு கட்ல பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்
ஜூன்08, 09
கேளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென் மேற்கு பருவமழை (SouthWest Monsoon) இன்று தமிழகத்தின் அநேக மாவட்டங்களுக்கு முன்னேறியுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
கொரோனா 3-ம் அலையை, வருமுன் தடுக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!
+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!
10 மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
Share your comments