தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் மிக கன மழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் (Niligiris expects very heavy rainfall) பெய்யக்கூடும்
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழையும் மற்றும் தேனி மாவட்டத்தின் மலை பகுதிகளில் கன மழையும் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும்,ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக. மேல் பவானியில் 31 செ.மீ, அவலாஞ்சியில் 22 செ.மீ, கூடலுர் பஜாரில் 20 செ.மீ. மேல் கூடலூர் 19 செ.மீ, வால்பாறை, சோலையாரில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை - Warning for Fisherman
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அதேபோல், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு மற்றும் மஹாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் மீனவர்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரியில் தொடரும் கன மழை - Heavy rains continue in Nilgiris
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூா் மற்றும் பந்தலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடரும் கனமழை காரணமாக ஓவேலி ஆறு, மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டுள்ளன
மேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!
குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!
காதி நிறுவனம் சார்பில் பட்டு முகக்கவசங்கள் கொண்ட பரிசுப்பெட்டி அறிமுகம்!!
Share your comments