ரெக்கரிங் பேமெண்ட்ஸ் (Recurring Payments) செய்கையில் தேவைப்படும் இ-மேண்டேட்ஸ் (e-mandates) வரம்பை ரூ.5,000-ல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வரம்பு ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக நிதி கொள்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றிற்கும் இதே விதிமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இ-மேண்டேட் வரம்பு (E-mandated limit)
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் ஜூன் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "உயர்த்தப்பட்ட இ-மேண்டேட் வரம்பு என்பது உடனடியாக அமலுக்கு வருகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இ-மேண்டேட் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளில், இ-மேண்டேட் கீழ் செய்யப்படும் முதலாவது பரிவர்த்தனை அல்லது கார்டுகள் மீதான நிலைத் தகவல்கள், ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் யுபிஐ சேவைகள் ஆகியவற்றின் போது தேவைப்படும் கூடுதல் சரிபார்ப்பு முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரூ.5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
உயர்த்தப்பட்டுள்ள வரம்பு:
இ-மேண்டேட் வழிமுறைகள் தொடர்பாக மறுஆய்வு செய்யப்பட்ட நடவடிக்கை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெறும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூடுதல் சரிபார்ப்பு பாதுகாப்பு என்பதை ரூ.5,000 இல் இருந்து ரூ.15,000 ஆக ஒரு பரிவர்த்தனைக்கு உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை பேமெண்ட் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 பிரிவு 18 பிரிவு 10 (2) கீழ் வெளியிடப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற, ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கொள்கை குழு கூட்டத்தில், புதிய முடிவை ரிசர்வ் வங்கி செயல்படுத்த இருப்பது குறித்த முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்டார்.
அன்றைய தினம், ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசுகையில், "சப்ஸ்கிரிப்ஷன், இன்சூரன்ஸ் ப்ரீமியம், கல்வி கட்டணம் அல்லது வேறெந்த உயர் மதிப்பு கட்டணங்களை ரெக்கரிங் பேமெண்ட்ஸ் அடிப்படையில் செலுத்தும்போது, ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.5,000-ல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
வாடகை செலுத்துதல், வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் போன்றவையும் உயர் மதிப்பு கட்டண வரம்பில் வருகிறது. டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு, ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு உதவிகரமாக இருக்கும் என்று ஃபோனோலெஜி வென்சர்ஸ் என்ற நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பிரஞ்சால் கர்மா தெரிவித்தார்.
இ-மேண்டேட் (E-mandated)
ஒரு இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் போன்றவற்றில் குறிப்பிட்ட தொகையை ரெக்கரிங் பரிவர்த்தனையாக மேற்கொள்வதற்காக வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் வழங்கும் நிலைத் தகவல் முறை தான் இ-மேண்டேட் என்பதாகும்.
ஓடிடி பிளாட்ஃபார்ம்ஸ், கேஸ் பில் மற்றும் மின்கட்டண ரசீது செலுத்துதல் போன்றவையும் இதில் அடங்கும். தொடர்புடைய மெர்சண்ட் பிளாட்ஃபார்ம் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்வதற்கு வாடிக்கையாளர் அல்லது அட்டைதாரர் வழங்கும் ஒப்புதல் இதுவாகும்.
மேலும் படிக்க
Share your comments