பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட 7 சிறிய வங்கிகளின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ்புக் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், வங்கிச் சேவைகளை எளிமைப்படுத்தும் விதமாகவும் மத்திய அரசு சிறிய பொதுத்துறை வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
வங்கிகள் இணைப்பு
அதன்படி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்த வங்கிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், பாங்க் ஆப் பரோடாவின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் மட்டுமே இயங்கும். அதேபோல், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்துள்ளன. அதில் இணைக்கப்பட்ட இரு வங்கிகளின் காசோலை புத்தகங்களும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
இது தவிர, ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் அரசு இணைத்துள்ளது.
பழைய காசோலைகளை மார்ச் 31 வரை மட்டுமே அனுமதி
சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக இணைக்கப்பட்ட பெரிய வங்கிகள் சார்பில் புதிய ஏ.டி.எம் கார்டு, பாஸ் புக், காசோலைகள் போன்றவை வழங்கப்பட்டுவிட்து. இருப்பனும், வாடிக்கையாளர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பழைய வங்கிகளின் காசோலைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக புதிய காசோலையைப் பெற்றிடுங்கள்
வங்கி இணைப்பு முழுமையாக முடிந்துவிட்டபடியால் ஏப்ரல் 1 முதல் சிறிய வங்கியின் காசோலைகள் காலாவதியாகிவிடும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, பெரிய வங்கி சார்பாக வழங்கப்பட்ட காசோலைகள் மற்றும் பாஸ்புக் புத்தகத்தை மட்டுமே இனி பயன்படுத்த முடியும். எனவே, வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகள் மற்றும் வங்கிப் புத்தகத்தை இதுவரை பெறவில்லை என்றால், வங்கிக் கிளைகளை அணுகி உடனடியாகப் புதிய காசோலைப் புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யவும். அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் ஏப்ரல் 1-க்குப் பிறகு, நீங்கள் கொடுத்த காசோலை செல்லததாகக் கருதப்படும்.
மேலும் படிக்க...
PM Kisan : 8வது தவணை பெற மார்ச் 31ம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள்! விவரம் உள்ளே!
ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை நகைக்கடன் - அதுவும் SBI வங்கியில்!
Share your comments