வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகம் , கேரளா, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து அணைகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
கேரளாவில் பெய்த பலத்த மழையால் கோவை, நீலகிரி, நெல்லை, தேனீ, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன மற்றும் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன.
மேலும் வட கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, திருவாருர், கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.
நேற்றைய நிலவரம் படி அதிக மழை பொழிவாக வேலூர் மாவட்டத்தில் 17 செ.மீ மழையும், வேலூர் அருகே உள்ள ஆலங்காயத்தில் 15 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தும், நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments