1. செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம் தகவல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
rain

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் வடமாநிலங்களிலும், புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மழை பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் சிவகாசி (விருதுநகர்) 7 செமீ., மலையூர் (புதுக்கோட்டை) 6செமீ., திருமயம் (புதுக்கோட்டை) 5செமீ., குடுமியான்மலை (புதுக்கோட்டை), கலெக்டர் ஆபீஸ் திருப்பூர் (திருப்பூர்) தலா 4செமீ., துறையூர் (திருச்சி), மானாமதுரை (சிவகங்கை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை), திருப்பத்தூர், திருபுவனம் (சிவகங்கை), பொன்னேரி (திருவள்ளூர்), திருப்பட்டூர், திருப்பூர், நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை) தலா 3செமீ., பொன்னமராவதி (புதுக்கோட்டை), டிஜிபி அலுவலகம் (சென்னை), நெடுங்கால் (கிருஷ்ணகிரி), செங்குன்றம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஓமலூர் (சேலம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சோழவரம் (திருவள்ளூர்), ராசிபுரம் (நாமக்கல்), மருங்காபுரி (திருச்சி), அரிமளம் (புதுக்கோட்டை), மேட்டூர் (சேலம்), சிட்டம்பட்டி (மதுரை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), ராயகோட்டை (கிருஷ்ணகிரி), ஏர்க்காடு (சேலம்), தஞ்சாவூர், இல்லயான்குடி (சிவகங்கை), மணப்பாறை ( திருச்சி), பெரம்பூர் (சென்னை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), புழல் (திருவள்ளூர்), பெருந்துறை (ஈரோடு), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா 2செமீ., மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதன் காரணமாக,

  • அக்டோபர் 19 -வடமேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபி கடல் பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • அக்டோபர் 20 வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • அக்டோபர் 21, 22 தெற்கு மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா கடலோர பகுதிகள், மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • அக்டோபர் 23 தெற்கு மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க..

விதை பெருக்கு திட்டம் : நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75% கொள்முதல் விலை - வேளாண் துறை

வட கிழக்கு பருவ மழை காலங்களில் தக்காளி விலை ரூ. 20 வரை உயர வாய்ப்பு - வேளாண் பல்கலை!!

இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடையாது - நவம்பர்-1லிருந்து விநியோக முறையில் மாற்றம்!!

English Summary: Chennai Meteorological department said North side tamilnadu and Puducherry will get rain in Next 2 days Published on: 19 October 2020, 02:08 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.