வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கோவை நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கூடும் என்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 9 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சின்கோனாவில் 8 செ.மீ, வால்பறை வட்டாச்சியர் அலுவலகத்தில் 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் ஆகஸ்டு 1ம் தேதி வரை கடலோர கேரளா, கர்நாடகா, லட்சதீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்
-
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மகராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் ஆகஸ்டு 3ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 -60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன்படிக்க செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க..
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து?
இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!
Share your comments