பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் வந்தார். இன்று காலையில் புதுவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. விவசாயிகளே உயர்ந்தவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவர்களை தொழுது வணங்கி பின் செல்பவர்கள் என்று பிரதமர் மோடி விவசாயிகளை பெருமைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பேசும் போது இதனை தெரிவித்தார்.
ஈரோடு கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். தமிழகத்தில் 9 ஸ்மார்ட் சிட்டிகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். அதோடு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கோவை சேலம் உள்பட 9 நகரங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 5 மெகாவாட் சூரிய மின்சக்தி (Solar power) நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டம்
கோதாவரி- காவிரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி (PM Modi) அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edapaddy palanisamy) வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிறப்புத் திட்டங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க குடிமராமத்து திட்டம், காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் திட்டம், விலையில்லா மண் (Soil) வழங்கும் திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் நிரைவேற்றப்பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் (Water Management) தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்காமல் அவற்றை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments