தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அப்போது பேசிய அவர், திமுக-வின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பின்பற்றிய அதே பாணியை ஸ்டாலின் தற்போதும் பின்பற்றுவதாக குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நடத்திவரும் கூட்டங்களில், பெண்களை சொல்லிக்கொடுத்து அழைத்துவந்து அதிமுக அரசின் மீது பழி சுமத்தி பேசி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக அரசின் நீண்ட கால திட்டமான விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
பசுமைக்குடில் அமைக்க ரூ.4.67 லட்சம் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
வேளாண் சட்டங்கள் குறித்த ஆலோசனை துவக்கம்! விவசாய அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது சமரசக் குழு!
Share your comments