கொரோனாவின் பிடியிலிருந்து விடுதலை ஆகியிருந்த உலகநாடுகளை மீண்டும் கொரோனா சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. மூன்று அலைகள் ஓய்ந்ததை அடுத்து மக்கள் நிம்மதியடைந்திருந்தனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் அதிகளவே இருக்கிறது. அதனையடுத்து மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது மீறி வந்தால் அபராதம் வசூலிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தொற்று குறைந்து விட்டதா என்பதை தெரிந்துகொள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு முதல்வர் சென்றார். அங்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் COVID-19 உறுதி செய்யப்பட்டதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என பதிவு செய்திருந்தார். முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டுமென்று பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க
Share your comments