இந்தியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களின் தேனை (Honey) ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கலப்படம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியர்களின் பாரம்பரியத்தில் தேனின் பங்கு இன்றியமையாதது. ஏனெனில் உடல் நலத்திற்காகவும், மருந்தாகவும் தேன் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பிரபல தேன் தயாரிப்பு நிறுவனங்களின் தேன், ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில், Nuclear Magnetic Resonance (NMR) எனப்படும் அதிநவீன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 13 பிராண்டுகளின் 10 பிராண்டுகளின் தேன்களில் சீனச் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல்மையம் (CSE) அதிர்ச்சித்தகவல் வெளியிட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பிராண்டுகள் அனைத்திலுமே சுத்தமான தேன் (Pure Honey)என அச்சிடப்பட்டிருப்பதுதான்.
கலப்படம் இருப்பதாக அறியப்பட்ட 10 பிராண்டுகளில், டாபர், பதஞ்சலி, பைதியானந்த் மற்றும் ஜான்டு (Dabur, Patanjali, Baidyanath and Zandu,) ஆகியவையும் அடக்கம்.
அதேநேரத்தில் Saffola, Markfed Sohna and Nature`s Nectar ஆகியவற்றின் தேன், இந்த (NMR) சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய உணவு தரக்கட்டுப்பாடு சட்டத்தைப் பொருத்தவரை, தயாரிப்புகளை இந்த (NMR) சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியமில்லை. வேறு 18 காரணிகள் உள்ளனவா என்பது மட்டுமே உறுதி செய்யப்படும்.
ஆனால் இந்தத் தயாரிப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது (NMR) சோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக CSCயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சுக்குழுவின் திட்ட இயக்குனர் அமித் குராணா கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தேனின் கலப்படத்தை மறைப்பதற்காகவே சீனச் சர்க்கரைப்பாழு சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கலப்பட வர்த்தகம் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதையே இதுக் காட்டுவதாகவும், தேனின் தரம் மற்றும் தரக் காட்டுப்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு நெறிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
எனினும் CSCயின் இந்த அறிவிப்பை, சில தேன் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.
மேலும் படிக்க....
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளை நெருங்குகிறது புரெவி புயல்! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
ஒரு ஏக்கரில் ரூ.3 லட்சம் வருமானம் -பளிச் லாபம் தரும் பட்டு வளர்ப்புத்தொழில்!
Share your comments