நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதித்து லலித்பூர் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பானி பூரி (Pani-Puri)
காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 7 பேருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர காத்மாண்டு நகரில் 5 பேருக்கும், சந்திரகிரி , புத்தனில்காந்த பகுதியில் தலா ஒருவருக்கு காலரா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போது நேபாளம் முழுவதும் காலரா நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
காலரா பரவல் (Cholera Spreading)
காலரா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பானிபூரி விற்க தடை விதிக்கப்படுகிறது. பானி பூரி விற்பதால் காலரா பரவ வாய்ப்பு அதிகமென்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காலரா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், டெக்குவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா அறிகுறி ஏதேனும் தென்பட்டால், பொது மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும்.
கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments