மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கும் நகர்புற மக்களுக்கும் வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மானியம் பெற நீங்கள் பதிவு செய்திருந்தால், உங்களின் பெயர் இத்திட்டத்துக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதா அல்லது ஏதேனும் காரணங்களுக்கான நிராகரிக்கப்பட்டுள்ளதா என எப்படிப் பார்ப்பது என்று தெரிந்துக்கொள்வோம்.
பிரதமரின் ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana)
பிரதாமரின் ஆவாஸ் யோஜனா என்பது 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இத்திட்டம் வழங்குகிறது. நகர்புற மற்றும் கிராமப்புற மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் PMAY Urban மற்றும் PMAY Gramin என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆண் குழந்தையுடன் அப்பாக்களுக்கும் லாபம் அள்ளித் தரும் "பொன்மகன் சேமிப்புத் திட்டம்"!!
கீழ்காணும் பிரிவுகளில் நீங்கள் இருந்தால் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றவர்கள்
-
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
-
உங்களது ஆண்டு வீட்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ .6 லட்சம் வரை இருக்கவேண்டும்
-
உங்கள் ஆண்டு வீட்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருக்கலாம்.
-
உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .12 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ.18 லட்சத்திற்கு குறைவாக இருக்கவேண்டும்
வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேறு ஒரு வீட்டை வைத்திருக்கக்கூடாது. அல்லது வேறு எந்த அரசாங்க வீட்டுத் திட்டங்களின் பலனையும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தில் இணைவதே முதல் முறையாக இருக்க வேண்டும்.
சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!
விண்ணப்பிப்பது எப்படி?
http://pmaymis.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
உங்களுக்கு மானியம் உண்டா இல்லையா?
நீங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால் கீழ் காணும் விதிமுறைகளை பின்பற்றி உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை அறியலாம்!
-
முதலில் பிஎம் ஆவாஸ் யோஜனா (http://pmaymis.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
-
அதில் search beneficiary என்பதைக் கிளிக் செய்யவும்..
-
அப்போது ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும் அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும்.
-
பின்னர் உங்களது பெயரின் முதல் மூன்று எழுத்துக்களைப் பதிவிடவும்.
-
அதன் பின்னர் 'show' என்பதை கிளிக் செய்யவும்.
-
இப்போது பட்டியலில் உங்களது பெயர் விவரம் காண்பிக்கப்படும்.
-
நிறையப் பேர் இருந்தால் உங்களுக்கு குழப்பம் இருக்கலாம். அப்போது நீங்கள் ctrl + f பட்டனை அழுத்தி உங்களது தந்தை பெயரைப் பதிவிட்டால் உங்களது விவரத்தை நீங்கள் பார்க்கலாம்.
Share your comments