தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளநிலையில், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
இருப்பினும் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட 30 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளதால், நோய் பரவல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? விபரம் உள்ளே!
PMKSY : ஒரு துளியில் அதிக மகசூல் திட்டத்திற்கு ரூ.400 கோடி - டெல்டா விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments