தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை, வட்டார அட்மா (ATMA) முகமை மையம் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் இணைந்து தென்னையில் சிவப்பு கூண் வண்டு மற்றும் சுருள் வெள்ளை ஈக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான செயல் விளக்க பயிற்சி முகாம் ஒன்றை, மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்ரஹார கண்ணாடி புதூர் பகுதியில் உள்ள வேளாண் பகுதிகளில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி (Rajeswari) தலைமை தாங்கினார்.
தென்னை மேலாண்மை:
இந்த செயல் விளக்க திடலில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் வண்ண கவர்ச்சிப் பொறி, ஒரு ஹெக்டேருக்கு 12 எனும் எண்ணிக்கையில், கிரீஸ் மற்றும் விளக்கெண்ணெய் தடவி, தென்னை மரங்களில் (Coconut trees) உள்ள நிழல் பாங்கான பகுதிகளில் கட்டி தொங்கவிட வேண்டும். மேலும் சிவப்பு கூன் வண்டை கட்டுப்படுத்த, சிவப்பு கூண் வண்டு இனக்கவர்ச்சி பொறி மேலாண்மை மற்றும் அவைகளை கட்டுப்படுத்தும் முறைகளை (Control methods) பற்றி கிராம தங்கல் திட்டத்தின் கீழ், வேளாண்மை கல்லூரி மாணவிகள் செய்து காட்டினர்.
வேளாண் தகவல்கள் சேகரிப்பு!
இந்த செயல் விளக்கப்பயிற்சியில், வேளாண் கல்லூரியை சேர்ந்த 11 மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் அட்மா முகமை மைய வட்டார தொழில்நுட்ப மேலாளர் அஷ்ரப் அலி செயல் விளக்க திடல் முறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் வேளாண் குறித்த தகவல்களை சேகரித்தனர். இதன் மூலம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு தென்னை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும். அதோடு, தென்னையில் வெள்ளை ஈக்கள் மற்றும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகள் தெளிவாக அறிந்து கொண்டனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை! வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்!
நாம் ஏன் இயற்கை விவசாய முறையைக் கையாள வேண்டும்?
Share your comments