1. செய்திகள்

தேங்காய் விலை அதிகரிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

KJ Staff
KJ Staff
Coconut Price Raised
Credit : The economic Times

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் விலை உயர்ந்ததை அடுத்து, தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. தேங்காய் விலை, நான்கு ஆண்டுகளுக்கு பின், உச்சம் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையலில் பயன்படும் பொருட்களில் மிகவும் முக்கியமானது தேங்காய் (Coconut). அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேங்காய், கோவை மாவட்டத்தில், 8,749 எக்டர் பரப்பளவில் சாகுபடி (Cultivation) செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்துார் வட்டாரத்தில் மட்டும், 4,200 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடியாகி உள்ளது.

தேங்காய் விலை உயர்வு:

தீபாவளி முதல், தேங்காய் விலை 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கு முன்பு, விவசாயிகளிடம் இருந்து, ஒரு கிலோ தேங்காய், ரூ.30 வரை கொள்முதல் (Purchase) செய்யப்பட்டது. தற்போது, இருப்பு தேங்காய் கிலோ, ரூ.44-க்கும், பச்சை தேங்காய், ரூ.42-க்கும் கொள்முதலாகிறது. சில்லறையில் தரமான தேங்காய், ரூ.50க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய கால ஆட்சியாளர்களை வெங்காயம் அலறவிட்டதைப் போல், வரும் தேர்தலில் தேங்காயும் ஒரு கை பார்த்துவிடும் என்கின்றனர் விவசாயிகள்.

தேங்காய் வியாபாரியின் கருத்து:

பனி அதிகரித்து வருவதால், காய்ப்பு திறன் குறைந்து, பெருமளவில் வரத்து சரிந்து விட்டது. கார்த்திகை மாதமும் துவங்கியதால், டன்னுக்கு, ரூ.5 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளது என தேங்காய் வியாபாரிகள் (Coconut traders) தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!

English Summary: Coconut prices increase! Shocked public! Published on: 28 November 2020, 08:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.