பருவமழையைத் தொடர்ந்து அதிகளவு பனிப் பொழிந்து (Snow Fall) வருகிறது. இதனால் குளிர் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தில் குளிர்ந்த வானிலையே நிலவும் என ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
குளிர்ந்த வானிலை (Cold Weather)
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த வாரம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வறண்ட வானிலையே நிலவியது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த வாரம் மழைப்பொழிவு பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்கு மண்டல மாவட்டங்களான, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில், வறண்ட, குளிர்ந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸ் வரையும், காற்றின் வேகம், 6 கி.மீ., வரையும் இருக்கும்.
குளிர்ந்த வானிலை இருக்கும் என்பதால், அனைத்து பயிர்களுக்கும் உரமிடுதல், மருந்து தெளித்தல், களையெடுத்தல் ஆகிய பணிகளை முடிக்கலாம்; தானியங்களை உலர வைக்கலாம்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி (Vaccine For Livestock)
நெல்லில் இலைக்கருகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது. தேங்கியுள்ள மழைநீரை கால்நடைகள் (livestock) அருந்துவதை தடுக்க வேண்டும். தற்போதைய வானிலையால் ஆந்த்ராக்ஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதால், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தொடரும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு!
குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!
Share your comments