இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பொறியியல் கல்லூரிகளில் பல மாணவ - மாணவிகள் சேர்ந்துள்ளனர்
புகார்கள் (Complaints)
அவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு ஏற்பதாக அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எச்சரிக்கை (Warning)
இந்த புகாரை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் உள்பட எந்த வகை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், மீறிக் கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பிச் செலுத்த வேண்டும்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் ஏஐசிடிஇ மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏதேனும் கட்டணம் இதற்கு முன்னர் வசூலித்து இருந்தால் மாணவர்களிடம் அதை உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇயின் இந்த எச்சரிக்கை கல்லூரி நிர்வாகத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க...
குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!
Share your comments