பயிர்களுக்கு இயற்கை இடர்பாடு காரணமாக இழப்பு ஏற்பட்டால் நஷ்ட ஈடு தொகை வழங்கப்படும்' என, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
வேளாண் பட்ஜெட்
கடலுாரில் அவர் நேற்று அளித்த பேட்டி: வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் (Agriculture Budget) தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. நடப்பு குறுவை பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கவில்லை என்று விமர்சனம் செய்யப்படுகிறது. காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது தொடர் நடவடிக்கையாக அமைய வேண்டும். இதற்கு முந்தைய அ.தி.மு.க., அரசு முயற்சி எடுக்கவில்லை. இதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய 3 முறை ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.இதை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
காப்பீடு
இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை (Paddy Harvest) செய்து 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 655 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.எனவே, குறுவைக்கான காப்பீட்டை விவசாயிகள் கேட்கவில்லை.
இன்னும், 20 நாட்களில் குறுவை சாகுபடி அறுவடை முடிந்து விடும். 20-21ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் உள்பட பல்வேறு பயிர்களுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,248.92 கோடியை கடந்த 16ம் தேதி தான் அரசு வழங்கியுள்ளது.
நாட்டின் மிக உயரமான மூலிகை தோட்டம்: உத்தரகாண்டில் திறப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ. 220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ. 1500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தி பாக்கி தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். உரம் தட்டுப்பாடு இல்லை. மற்ற பயிர்களுக்கு காப்பீட்டு பிரிமியம் செலுத்த வரும் 31ம் தேதி கடைசி நாளாகும்.
கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைத்து கடன்களும் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியின் போது தலைவர்களாக பொறுப்பேற்றவர்கள் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர் என்று அவர் கூறினார். கலெக்டர் பாலசுப்ரமணியம், எஸ்.பி., சக்திகணேசன், அய்யப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க., நிர்வாகிகள் பாலமுருகன், ராஜா, சுந்தரமூர்த்தி உடனிருந்தனர்.
மேலும் படிக்க
Share your comments