தமிழக அரசு சார்பில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது அதன்படி சமீபத்தில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்பட்டு, அதில் 40% குறைந்தபட்சம் மதிப்பெண்கள் எடுத்தால் தான் தமிழ்நாடு அரசுப் பணிகளில் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
போட்டித் தேர்வு (Competitive exam)
தமிழ்நாடு அரசுப் பணிகளில் எந்தத் தேர்வுகளாக இருந்தாலும் முதல் அடிப்படைத் தேவை தமிழ்ப்புலமை வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். அதில் 40% மதிப்பெண் பெற வேண்டும். அப்படி இருந்தால் தான் பிற பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்ற பல்வேறு மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், வங்கி, ரயில்வே தேர்வுகள் என அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.
விலக்கு (Exclude)
இந்நிலையில் அனைத்து வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளில் தமிழ்த்தாள் தேர்வை எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 40%க்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
முதல்வர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
பொதுத்துறை வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தயாராக இருங்கள்!
Share your comments