பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தினமும் வீட்டில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை பயன்படுத்தி குடித்து வருகிறேன், என்று முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) கூறினார். பனங்கருப்பட்டியை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
விருது வழங்கும் விழா:
சென்னை அருகே உள்ள மாங்காட்டில் நாடார் சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி நாடார் சமூக சாதனையாளர்களுக்கு விருதுகளையும் (Awards) பரிசுகளையும் வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “நாடார் சமுதாய மக்கள் கல்வி, உழைப்பு, சமூகப் பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள். நாடார் சமூக மக்கள் கல்வியாளர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் (Kamarasar) இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும், அவருடைய சாதனைகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன.
பனை விவசாயிகள் கோரிக்கை:
நாடார் சமூக மக்கள் பனைபொருட்கள் (Palm) தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதை நான் தினந்தோறும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை பயன்படுத்தி குடித்து வருகிறேன். இந்த விழாவில், கருப்பட்டியை (Palm Jaggery) ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை பற்றி தமிழக அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும்” என்று கூறினார்.
பனங்கருப்பட்டியை ரேசன் கடைகள் மக்களுக்கு அளித்தால், அழிந்து வரும் பனைத் தொழில் புத்துயிர்ப் பெறுவதோடு, பொதுமக்களுக்கும் ஆரோக்கியமான இனிப்பு வகையும் கிடைக்கும். இதனால், தமிழகத்தில் ஏராளமான பனைமர விவசாயிகள் பயனடைவார்கள். அவர்களது வாழ்வும் மேலோங்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூலி ஆட்கள் பற்றாக்குறை! விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இயந்திரங்கள்!
பொங்கலையொட்டி திருச்சியில் களைகட்டிய ஆட்டுச்சந்தை! மொத்த விற்பனை எவ்வளவு?
Share your comments