மக்களின் வசதிக்காக இனி ரேஷன் கடைகள் மூலமே சமையல் சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுப்புக்கு முழுக்குபோடும் முயற்சியாக இதனை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
இலக்கு (The goal)
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்பை வழங்க வேண்டும் என்பது மத்திய மோடி அரசின் இலக்காகும். இதற்காகவே இலவச சமையல் சிலிண்டர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் சமையல் சிலிண்டர்களுக்கு மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சிலிண்டர் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிலிண்டர் விற்பனையை ரேஷன் கடைகள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் விற்பனை (Ration store sales)
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட சலுகைகளும் அவ்வப்போது கிடைக்கின்றன. இந்நிலையில், சமையல் சிலிண்டர்களும் இனி ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும்.
5 கிலோ சிலிண்டர் (5 kg cylinder)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரேஷன் டீலர்கள் சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதற்கான ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி, விரைவில் 5 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலமாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும். சிலிண்டர் விலை என்ன என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
விரைவில் அறிவிப்பு (Notice coming soon)
இதுத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் சிலிண்டரை போனில் புக் செய்துவிட்டு ரேஷன் கடைகளில் பெற வேண்டுமா? 5 கிலோ சிலிண்டர் என்பதால், வாடிக்கையாளரே ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருந்து, வாங்கிச் செல்ல வேண்டுமா என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க...
விவசாயிகள் மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.10,000மானியம்!
விளைச்சல் அதிகரிப்பு- கத்திரிக்காய் கிலோ 8 ரூபாய்- முள்ளங்கி 10 ரூபாய்!
Share your comments