கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசி (Corbevax Vaccine)
கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களும், பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உயர்ந்து வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. முகக் கவசத்தை முறையாக அணிய வேண்டும். தனிமனித விலகலை கடைபிடிப்பதும், கொரோனா வைரஸை விரட்ட உதவும்.
மேலும் படிக்க
கலர் அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி!
Share your comments