தடுப்பூசி (Vaccine) போட்டுக்கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கோவிட் 3வது அலை (Covid 3rd wave) தாக்கலாம் என இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
3வது அலை
இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு இப்போது தான் கோவிட் 2வது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தொற்று பாதிப்புகளின் கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கோவிட் 3வது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும். இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாக்கள், யாத்திரைகள் என்பது எல்லாம் மக்களுக்கு அவசியமானது தான். ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும். கோவிட் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் இப்படியான ஒன்று கூடல்களுக்கு அனுமதித்தால் கோவிட் 3வது அலை அதிவேகமாக பரவ, இவை காரணமாகி விடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) போட்டுக் கொள்வது; கோவிட்டை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!
மன உளைச்சலில் மருத்துவர்கள்: தீர்வு காண உதவி மையம்!
Share your comments