செப்டம்பர், அக்டோபர் மாத வாக்கில் கொரோனா வைரஸின் 3-வது அலை வர உள்ளதால், அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு குறைந்துள்ளது (The vulnerability is reduced)
இந்தியாவில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலை சமீப நாட்களாகக் குறைந்து வருகிறது. 4 லட்சத்துக்கு மேற்பட்டோரை அனுதினமும் பாதித்து வந்த இந்தத் தொற்று, தற்போது ஒன்றரை லட்சத்துக்கும் கீழே சரிந்து விட்டது. இதைப்போல உயிரிழப்புகளும் சரிந்துள்ளன.
இதன்மூலம் கொரோனா 2-வது அலையை இந்தியாக சிறப்பாக நிர்வகித்து இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
நம்பிக்கைக் கிடைத்தது (Got hope)
கொரோனாவின் முதல் அலையை இந்தியா எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் 2-வது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையைக் கொடுத்தன.
வேகமாகப் பரவியது (Spread fast)
அதேநேரம் 2-வது அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்களின் வெளியிட்ட ஆய்வுகளும், அது வீரியமாக இருக்கும் என்றுக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட மத நிகழ்வுகள், திருமணங்கள் போன்றவற்றால், 2-வது அலை மிகுந்த வேகமாகப் பரவியது.
கொரோனா வைரஸ் (Corona virus)
எனினும் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் 2-வது அலையைச் சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம்.
ரயில்வே, விமான நிலையங்கள், ஆக்சிஜன் போக்குவரத்துக்காக ராணுவம் போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.
தொற்றுக் குறைந்தது (Infection is minimal
மொத்தத்தில் நியாயமான முறையில் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். கொரோனாவின் 2-வது அலையை சிறப்பாக கையாண்டதால், புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.
இளம் தலைமுறையினருக்குக் குறி (Mark for the younger generation)
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த அலை இளம் தலைமுறையினரை அதிக அளவில் பாதிக்கும் எனவும் எச்சரித்திருக்கின்றனர்.
செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் (In the months of September-October)
இந்த 3-வது அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது. எனவே இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமது மருத்துவ கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
8 ஆசிய சிங்கங்களுக்கும் கொரோனா- தனி கூண்டில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொரோனா நோயாளிக்கு திருமணம் - கவச உடையில் தாலிக் கட்டிக்கொண்ட மணப்பெண்!
Share your comments