தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாகப் பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.
பாதிப்பு அதிகரிப்பு (Increased vulnerability)
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
பூஸ்டர் (Booster)
சிறுவர் -சிறுமிகளுக்கு முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.
2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஒமிக்ரான் (Omicron)
ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. அதனால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
கொரோனா 3- வது அலை (Corona 3rd wave)
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3-வது அலையாகப் பரவுகிறது. எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சற்று கவனத்தைச் செலுத்துங்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments