கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது, என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவக் கல்லூரிகள் (Medical Colleges) இன்று திறக்கப்பட்டதால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின் அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
மருத்துவ கல்லூரிகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். கல்லூரியில் மாணவர்களுக்கு முகக்கவசம் (Mask) வழங்கச் சொல்லி இருக்கிறோம். வளாகங்களில் தனி மனித இடைவெளி (Social Distance) அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.
கொரோனா தொற்று சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சற்று கடினமாக உள்ளது. திருமண நிகழ்வு உள்ளிட்ட ஒரு சில மதம் சார்ந்த நிகழ்வு நடப்பது சுகாதாரத்துறைக்கு சவாலாக இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து பணி புரிவதால் முதுகுத் தண்டு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு!
கையிருப்பில் 12 லட்சம் தடுப்பூசி
கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டத்தில் முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி (Second Dose Vaccine) செலுத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்னொரு அலைக்காக மக்கள் காத்திருக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு அவ்வப்போது இருக்கிறது. தற்போதைய நிலையில் 12 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் இன்னும் 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது. பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
Share your comments