இரயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரால் ஏற்படும் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்க சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 50 ரயில்வே ஸ்டேஷன்களில் கொரோனா பரிசோதனை ஒன்றரை ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு பூஜ்யத்துக்கு வந்ததால், பரிசோதனை நிறுத்தப்பட்டது.
பரிசோதனை (Testing)
வட மாநிலங்களில் கொரோனா மெல்ல அதிகரித்து வருவதால், அங்கிருந்து ரயிலில் தமிழகம் வருவோரை, மீண்டும் ரயில் நிலையத்தில் வைத்து, பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை ஆலோசித்துள்ளது. முதல் கட்டமாக, வடமாநிலத்தினர் அதிகமாக வந்திறங்கும் ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும், பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னை ஐ.ஐ.டி.,யில் 30 பேருக்கு தொற்று உறுதியானது.
13 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இவ்விடுதியில் உள்ளனர். தொற்று பரவல் வேகமெடுத்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவரால் பிறருக்கு தொற்று பரவியுள்ளது.
இதனால் தான், முதல்கட்டமாக வடமாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழகம் வந்திறங்குவோரை பரிசோதிக்க, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பூஸ்டர் டோஸ் அவசியம்!
கொரோனா சிகிச்சைக்கு இன்டோமெதசின் மருந்து: சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் கண்டுபிடிப்பு!
Share your comments