1. செய்திகள்

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

R. Balakrishnan
R. Balakrishnan
Powder Medicine
Credit : Dinamalar

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்தை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. கொரோனா 2வது அலை (Corona 2nd Wave) இந்தியாவை திணறடித்துக் கொண்டிருக்கிறது. அன்றாட பாதிப்பு 4 லட்சத்தை சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி (Vaccine) பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

டி-ஆக்ஸி டி-குளுகோஸ்

கொரோனா சிகிச்சைக்கான மருந்து என்றால் இப்போதைக்கு ரெம்டெசிவிர் மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், அந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இது பவுடர் (Powder) வடிவில் உள்ளது. இந்த மருந்தை தண்ணீரில் கலக்கிக் குடிக்கலாம். இந்த மருந்தை டி.ஆர்.டி.ஓ., அமைப்பு, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது.

இந்த மருந்துக்கு டிஆக்ஸி டி- குளுகோஸ் (2-deoxy-D-glucose (2-DG) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது 110 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டது. மருந்தை உட்கொண்ட நோயாளிகள் தொற்றிலிருந்து வேகமாகக் குணமடைவதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நாடு முழுவதும் 6 மருத்துவமனைகளில் நடந்துவருகிறது.

அவசர கால பயன்பாடு

மேலும் இந்த மருந்து, மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருக்கும் நிலையை வெகுவாகக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும் அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. 'இந்த மருந்து சந்தைக்கு வந்தால் ரெம்டெசிவிரை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் மாறலாம். இது கொரோனா சிகிச்சையில் புதிய மைல்கல்லாக அமையும்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனாவைத் தடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

English Summary: Corona medicine in powder form for emergency use! Federal approval Published on: 08 May 2021, 07:18 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.