தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா உச்சத்தை எட்டலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூத்ரா மாதிரி (Sutra model)
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்துக் கணிப்பதற்காக சூத்ரா மாதிரி எனப்படும் கணித மாதிரியை விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது. கொரோனாப் பாதிப்புகளின் தாக்கத்தை அறியவும், அதன் அடிப்படையில் கொள்கை முடிவுகளை வகுப்பதற்கும் ‘சூத்ரா மாதிரி’ போன்ற கணித அடிப்படையிலான மாதிரிகள் உதவுகின்றன.
உச்சத்தை எட்டும் (Peak)
இந்நிலையில், சூத்ரா மாதிரியின் அடிப்படையில், தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை எட்டலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூத்ரா மாதிரியை உருவாக்கியவர்களில் ஒருவரான ஐதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் எம்.வித்யாசாகர் கூறுகையில்,
இதுவரை உச்சத்தை எட்டவில்லை (Not yet peaked)
தமிழ்நாடு, பஞ்சாப், இமாசலபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் இன்னும் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டவில்லை.
மே 29-31 வரை (May 29-31)
தமிழகத்தில் மே 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வாக்கிலும், புதுச்சேரி மே 19 மற்றும் 20-ம் தேதி வாக்கிலும் உச்சத்தை எட்டலாம். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இன்னும் உச்சத்தை அடையவில்லை. அசாம் மாநிலம் அனேகமாக மே 20-21-ம் தேதிகளில் உச்சத்தை எட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.
ஆறுதல் அளிக்கிறது (Offers comfort)
அதேநேரத்தில் சூத்ரா மாதிரியின்படி ஆறுதல் அளிக்கும் விஷயமாக, டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், குஜராத், மத்தியபிரதேசம் ஆகியவை கொரோனா 2-வது அலை உச்சத்தைக் கடந்துவிட்டன.
மே 4-ம் தேதி (May 4th)
நம் நாட்டில் கடந்த மே 4-ம் தேதி 2-வது அலை உச்சத்தைத் தொட்டதாகவும், அதன்பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் சூத்ரா மாதிரி கூறுகிறது.
சர்ச்சையில் கணித மாதிரி (Mathematical model in controversy)
ஆனால் இந்த கணித மாதிரி குறித்த கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. கொரோனா 2-வது அலையின் அசலான தன்மையை இந்த மாதிரியால் கணிக்கமுடியவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!
Share your comments