அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 7,66,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது வெள்ளைமாளிகை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு முதலிடம்
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோன வைரஸ், தற்போது 3- அலையின் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோன வைரஸின் பாதிப்பால் வல்லரசான அமெரிக்காவே திக்குமுக்காடி வருகிறது.
இதனால், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
7.13 கோடி
இதுவரை உலக அளவில் 34.66 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56.02 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 7.13 கோடியை கடந்துள்ளது.
7,66,277 பேருக்கு
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,66,277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,13,67,548 ஆக உயர்ந்துள்ளது.
8 லட்சம் பலி
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 2,774 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரத்து 640 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 4,41,66,309 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,63,13,599 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!
Share your comments