கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் ஆயுட்காலம் உத்தேசமாக 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆயுட்காலம் (Lifespan)
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இயங்கிவரும் ஐஐபிஎஸ் எனப்படும் மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆயுட்காலத்திற்கான காரணிகள்
அதில், ஒருவருடைய ஆயுள் காலம் (Lifespan) என்பது அவர் ஆணா? பெண்ணா? என்கின்ற பாலினம், வாழ்கின்ற இடம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், சுகாதார வசதிகள் ஆகியவற்றைப் பொருத்துக் கணிக்கப்படுகிறது. இதில் பரம்பரைத் தன்மையும் அடங்கும்.
ஆய்வு (Survey)
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 69.5 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 72 ஆகவும் இருந்து வந்தது. ஆனால் கொரோனாவுக்குப் பின்பு இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் எப்படி உள்ளது என்பதை பற்றி தெரிந்துகொள்ள ஆய்வு நடத்தப்பட்டது.
இதன்படி இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.5 வயதிலிருந்து 67 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 72 வயதில் இருந்து 69.8 வயதாகவும் குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிப்பால் நாம் பல முன்னேற்றத்தை கண்டு வந்தோம். ஆனால் இந்த கொரோனா அதை அனைத்தையும் அழித்து விட்டது.
4.5 லட்சம் பேர் பலி
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 4.5 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். ஆயுட் காலம் குறித்து இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, வேல்ஸில் ஓராண்டுக்கு மேல் குறைந்துள்ளது. அது போல் ஸ்பெயினில் 2.28 ஆண்டுகளாக குறைந்துள்ளது. சராசரி ஆயுட் காலம் இரு ஆண்டுகள் குறைகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் ஆட்டம்
இதனிடையே சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!
Ayog warns! கொரோனா மீண்டும் வேகமாகப் பரவக் கூடும்- நிதி அயோக் எச்சரிக்கை!
Share your comments