டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளதாகவும், இவை பாதிப்பின் சுனாமியை (Tsunami) ஏற்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இரட்டை அச்சுறுத்தல் (Double threat)
உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸ் தொற்றால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதைவிட அதிகளவு பரவும் ஒமைக்ரான் வைரஸ் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறியதாவது: டெல்டா மற்றும் ஒமைக்ரான் கொரோனா வகைகள் இணைந்து இரட்டை அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன. இது புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.
கொரோனா சுனாமி (Corona Tsunami)
மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
டெல்டாவை போலவே ஒமைக்ரான் அதிவேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இவை கொரோனா பாதிப்பின் சுனாமியை ஏற்படுத்துகிறது. இது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யக்கூடும்.
மேலும் படிக்க
2-வது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸுக்கும் கால இடைவெளி எவ்வளவு?
Share your comments