இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி (Vaccine) செலுத்திக் கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் (Immunity) அதிகரிப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு:
அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலையின் ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 63 பேரை, தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர். பரிசோதனைக்கு உள்ளானவர்களில், குறைந்தபட்சம் ஒரு, 'டோஸ்' பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 26 பேரின் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
இவர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் உடைய மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்காணிப்பை தொடர்ந்தனர். அப்போது, மனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் உடைய செல்கள், கொரோனாவை உருவாக்கும் வைரசின் (Crona Virus) திறனை செயலற்றதாக மாற்றுவது உறுதியானது. பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசையும் எதிர்க்கும் திறன், அவர்களிடம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்தியாவிலும், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது மக்களுக்கு செலுத்தப்படுகிறது. ஆய்வுகளின் முடிவை வைத்துப் பார்க்கையில், தடுப்பூசி போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் படிக்க
கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு
கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!
Share your comments