கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பூசி திருவிழாவை (Vaccine Festival) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தடுப்பூசி திருவிழா ஒவ்வொரு மாநிலத்திலும் நடௌபெற வேண்டும் என பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் நேற்று (ஏப்.,14) முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 4,328 மையங்கள் மூலம் தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசி திருவிழா
பிரதமர் மோடி (PM Modi) அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை (Awareness) பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும். தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தினசரி 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சின்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1,900 மினி கிளினிக்குகள் (Mini Clinic) தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4,328 மையங்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதில் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கொரோனா வைரஸ் பரவல் அச்சம்! தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!
Share your comments