லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும். அப்படி கொரோனா வைரஸ் இதயம், மூளையில் அதிக நாட்கள் இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸ் சில நாட்கள் சுவாசப் பாதையில் இருந்து அதன் பிறகு இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பரவி பல மாதங்கள் நீடிக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சார்ஸ்-கோவ்-2 வைரசின் பரவல் மற்றும் உடல் மற்றும மூளையின் நிலைத்தன்மை பற்றி அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிக விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு முடிவுகள் (Study results)
லேசான அறிகுறியற்ற மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று நீண்ட காலம் உடலில் இருக்கும். அமெரிக்காவில் தொற்று நோய் பரவிய முதல் ஆண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த 44 நோயாளிகளின் பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட திசுக்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
230 நாட்கள் வரை (Up to 230 days)
அப்போது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தோன்றிய 230 நாட்கள் வரை மூளை முழுவதும் உள்ள பகுதிகள் உள்பட உடலின் பல பாகங்களில் தொடர்ந்து சார்ஸ்-கோவ்-2 ஆர். என்.ஏ. இருப்பது தெரியவந்துள்ளது.
நோய் தாக்கி முதல் வாரத்தில் இறந்த கொரோனா நோயாளிகளிடம் இருந்து நுரையீரல், இதயம், சிறுகுடல் மற்றும் அட்ரீனல் சுரப்பி உள்ளிட்ட பல திசுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட வைரசை வளர்த்தனர்.
எப்படி பரவுகிறது? (How is it spread?)
-
அப்போது சார்ஸ்- கோவ்-2 வைரஸ் நோய் தொற்று காற்றுப் பாதைகள் மற்றும் நுரையீரலில் ஆரம்பத்தில் பரவுகிறது.
-
அதன் பிறகு மூளை மற்றும் பரவலாக முழு உடலிலும் உள்ள செல்களைப் பாதிக்கலாம்.
-
இதயத் தசைச் செல்களை நேடியாக கொல்கின்றன.
-
மேலும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் அறிவாற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
-
பொதுவாக சார்ஸ்- கோவ்-2 வைரஸ் சிலருக்கு அழிக்கப்படலாம்.
-
ஆனால் சிலருக்கு பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் நீடித்து பல கோளாறுகளை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments