இந்தியாவில் நேற்று ஏப்ரல்19, 1,247 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,067 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,47,594 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,547 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,13,248 ஆனது. தற்போது 12,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 40 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,22,006 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186.90 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 17,23,733 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
முகக்கவசம் (Face Mask)
கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசர அவசியமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கோவிட் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஏப்ரல் 19, 30 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியமாகும். தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல், தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்தால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. டில்லி, உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த சூழலிலும் விலக்கு அளிக்கப்படவில்லை.
மேலும் படிக்க
உலகின் 100 சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி!
Share your comments